பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
5G சேவை கட்டணம் எவ்வுளவு?.. அதிரவைக்கப்போகும் ஏர்டெல்., ஜியோ நிறுவனங்கள்.!
இந்தியாவில் 5G சேவை மிக விரைவாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த சேவை மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏர்டெல் மற்றும் ஜியோ பேக்களின் கட்டணம் தொடர்பான விவரமும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 4G-க்கு செலுத்தும் கட்டணத்தை விட அதிகமான கட்டணம் 5G -க்கு வசூலிக்கப்படும்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் சேவை இரண்டு நிறுவனத்தாலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் 5G பயனர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால், கட்டண விபரம் தான் அவர்களை லேசாக யோசிக்க வைத்துள்ளது.