பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Airtel Recharge:பிப்ரவரியில் உயருகிறது ஏர்டெல் கட்டணம்?.. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.!
இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் தனது நெட்ஒர்க் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் முன்னணியில் இருப்பது ஏர்டெல். இந்நிறுவனம் சமீபமாக தனது பயனர்களுக்கான கட்டண சேவையை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் முதல் பிரீபைடு பயனர்களுக்கான கட்டணம் உயர்த்துவது தொடர்பான விஷயம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அரியானா, ஒடிசா போன்ற மாநிலத்தில் ஏற்கனவே ரூ.99 க்கு இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை ரூ.155 ஆக உயர்த்தப்பட்டது. இதனை சோதனை ஓட்டமாக பிப்ரவரி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.