பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்! கொந்தளித்த அமித் ஷா!!
கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்திய மக்கள் பெரும்பாலோனோர் மோடி அவர்களுக்கும், அமித்ஷா அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இவர்களது கண்டனத்தினால் பலரும் எரிச்சல் அடைந்துள்ளனர். எதிர்கட்சியினர்கள் பலர் இதனை ஆதரித்துவரும் நிலையில் சிலரது கண்டனம் இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலரது கண்டனத்திற்கு பதிலளித்து பேசிய அமித்ஷா, “காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன். 370 சட்டப்பிரிவை மாற்றியமைக்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் என நான் குறிப்பிடுவது பாகிஸ்தான், சீன ஆக்கிரமைப்பையும் சேர்த்துதான். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்கத் தயார்” என பேசியுள்ளார்.