சுழற்றி அடித்த ஆம்பன் புயல்! நொறுங்கி விழுந்த மரங்கள், மின்கம்பங்கள்!



Amphan storm crosses West Bengal


ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நேற்று மாலை கரையை கடந்தது. மேற்கு வங்காளத்தில் பலத்த சூறாவளி காற்று, மழையுடன் ஆம்பன் புயல் கரையை கடந்தது. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

ஆம்பன் புயல் ஒரிசாவின் பூரி மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிற்கும் இடையே மையம் கொண்டிருந்தது. நேற்று மாலை இந்த புயல் மேற்கு வங்கத்தின் கிழக்கு பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், மேற்கு வங்கத்தில் பலத்த சூறாவளி காற்று, மழையுடன் ஆம்பன் புயல் கரையை கடந்தது.

Amphan

இந்த புயல் மேலும் வலுவடைந்து வடக்கு திசையில் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களையொட்டிய கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் நேற்று மாலையில் இருந்தே நல்ல மழை பெய்துள்ளது.

இந்த புயலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த புயல் 20 வருடங்களில் இல்லாத சேதத்தை உருவாக்கியது. புயல் கரையை கடந்த போது சுழன்றடித்த காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.