#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து... 8 பேர் பலி... 2 பேர் கவலைக்கிடம்...
ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனத்திற்கு 10 பேர் காரில் பயணம் செய்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சதீஷ்கர் மாநிலம், தண்டேவாடி மாவட்டம், பாமினி பகுதியை சேர்ந்த 10 பேர் காரில் ஆந்திராவில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். ஒவ்வொரு கோவிலாக தரிசனம் செய்து விட்டு ராமர் சீதை வனவாசம் சென்றதாக கூறப்படும் பர்ணசாலாவில் உள்ள கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது கார் ஏடுகுர்லால பள்ளி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துள்ளானது. அதில் காரில் பயணம் செய்த 6 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். இச்சம்பவம் குறித்து சிந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து வந்த போலீசார் காரில் உயிருக்கு போராடிய 4 பேரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மீதம் இருந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக பத்ராச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.