#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவன் கண்முன்னே பயங்கரம்.. பெண் 3 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. இரயில் நிலையத்தில் துயரம்.!
ரயில் நிலையத்தில் கணவனை தாக்கி, மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 காமுகன்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பேருந்து எதுவும் கிடைக்காததால், ரயில் நிலையத்தில் உறங்கியுள்ளனர்.
அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மூன்று காமுகன்கள் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கிவிட்டு, மனைவியை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின் இந்த விஷயம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இரண்டு இளைஞர்கள் உட்பட பெண்ணை பலாத்காரம் செய்த 3 காமுகன்களையும் கைது செய்துள்ளனர்.