நித்தியானந்தாவின் தனி நாட்டிற்கு செல்ல விசா வாங்குவது எப்படி என கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர்! வைரலாகும் ட்வீட் பதிவு.
சர்ச்சைகள் அனைத்திற்கும் பெயர் போனவர் சுவாமி நித்யானந்தா. இவர் பெயரில் பலவிதமான வழக்குகள் இருந்து வருகின்றன. இருப்பினும் ஒரு சிலர் இவரை ஒரு கடவுளாக நினைப்பது, இவர் கூறும் கருத்துக்களை அப்படியே நம்புவது என்று இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதுமட்டுமின்றி அந்த தீவை நித்தியானந்தா இந்துக்களின் நாடாக உருவாக்கவுள்ளதாகவும். மேலும் அந்த தீவிற்கு செல்வதற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்ற புதிய தகவல் வெளியானது.
இதனை அடுத்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த தீவிற்கு செல்வதற்கு எப்படி விசா வாங்குவது என கேட்டு ட்வீட் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
What is the procedure to get visa?? Or is it on arrival? 🤷🏼♂️ #Kailaasa
— Ashwin Ravichandran (@ashwinravi99) December 4, 2019