#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளின் ஒருமித்த் தீர்ப்பு! தீர்ப்பை அறிவித்தார் தலைமை நீதிபதி!
அயோத்தியில் பாபர் மசூதி, வெற்றிடத்தில் கட்டப்படவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் கூறினார்.
ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அரசியல் சாசன அமர்வு சார்பில் 5 நீதிபதிகளும் ஒருமித்த் தீர்ப்பு வழங்கவுள்ளது என்று தமைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர்.
இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து வருகிறார். தீர்ப்பில் அவர் கூறுகையில், ஒரு பிரிவினரின் மத நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது
அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதியில் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அங்கிருந்த கட்டிடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை.
ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது.