தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை! நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி!



baby try to wake his died mom

பிஹாரின் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் விவரம் அறியா குழந்தை ஒன்று இறந்து போன தன் தாயை எழுப்ப முயன்ற வீடியோ காட்சி ஒன்று சமூகவலத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார்  மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் 23 வயது பெண் ஒருவர் திங்கள்கிழமை புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலில் வந்திறங்கினார். கடுமையான வெப்பம், பசி காரணமாக அவர் முசாபூர் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.

அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் ரயிலில் இறந்துவிட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது, இதனையடுத்து ரயில்வேஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அவரது உடல் வைக்கபட்டு இருந்தது. அந்த பெண்ணுடைய  சிறிய மகன்  தனது தயார் இறந்தது தெரியாமல் தாயின் உடலின் மேல் போர்த்திய துணியை இழுத்து அந்த பெண்ணை எழுப்ப முயற்சித்துள்ளான் .இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.