அடேங்கப்பா.. தள்ளாடும் வயதிலும் 6,129 அடி மலையேறி பாராட்டுக்களை குவிக்கும் மூதாட்டி.!



Bangalore 62 Aged Old Lady Hills Ride 6129 Feet Agasthyamalai Hills Trekking

தொழில்நுட்ப வளர்ச்சியுகத்தில் சிறார்கள் முதல் பெரியவர்கள் பலரும் தங்களின் சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்படும் சாதனை எண்ணத்திற்கு வயது என்பது கிடையாது. 62 வயது மூதாட்டி 6 ஆயிரம் அடி உயர மலையில் ஏறி தற்போது சாதனை செய்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அனுமந்த நகரில் வசித்து வரும் மூதாட்டி நாக ரத்தினம்மா (வயது 62). இவர் இளவயதாக இருந்தபோதே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டு இருந்ததால், பல்வேறு மலைகளில் ஏறி இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் குழந்தைகள் மற்றும் கணவர் என குடும்ப வாழ்க்கை தொடங்கியதால், மலையேற்றத்திற்கு அவர் கட்டாய விடுப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

அவரின் 22 வயதில் இறுதியாக மலையேற்றத்திற்கு சென்ற நாக ரத்தினம்மா, அதன்பின்னர் மலையிடத்திற்கு செல்ல முடியவில்லை. தற்போது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், கணவரும் தனது பணிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் மீண்டும் மலையேற வேண்டும் என்ற எண்ணம் நாக ரத்தினம்மாவுக்கு வந்துள்ளது. 

bangalore

இதனை தனது மகன் சிவகுமாரிடம் தெரிவிக்கவே, அவரும் தாயின் ஆசையை நிறைவேற்ற பரிபூரண சம்மதம் வழங்கினார். இதனையடுத்து, கேரளா - தமிழ்நாடு எல்லைப்பகுதியில் இருக்கும் 6,129 அடி உயரம் கொண்ட அகஸ்தியர் மலையில் ஏற முடிவு செய்யப்பட்டுள்ளது. தனது மகன் சிவகுமாருடன் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரயிலில் பயணித்த நாக ரத்தினம்மா, 13 பேர் குழுவுடன் இணைந்து மலையேறியுள்ளார்.

62 வயது ஆவதால் வனத்துறையினர் நாக ரத்தினம்மாவால் மலையேற இயலுமா? என சந்தேகித்த நிலையில், அவர்களின் சந்தேகத்தை தவிடுபிடியாக்கும் வகையில் புடவை கட்டிக்கொண்டு நாக ரத்தினம்மா மலையேறி முடித்துள்ளார். மூதாட்டிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.