விரைவில் அமலாகிறது இரவுநேர ஊரடங்கு?.. மாநில அரசுக்கு அவசரபரிந்துரை?..!



bangalore-city-corporation-may-be-recommend-to-state-go

ஓமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால், பெங்களூரில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில், உருமாறிய அபாயகரமான ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர் உட்பட 2 பேருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா உறுதியான நிலையில், மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. 

இவர்களின் மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, மரபணு வரிசை பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் முடிவுக்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்துள்ளனர். பெங்களூரு நகரை பொறுத்த வரையில் தினசரி கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

karnataka

தினமும் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், திடீரென 200 க்கும் மேல் பாதிப்பு உறுதியாக தொடங்கியுள்ளது. மேலும், தலைநகரில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

இதனால் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் நகர்ப்புறங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அறிவிக்க, அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய மாநகராட்சி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில், மாநில அரசுக்கு இரவு நேர ஊரடங்கு குறித்து பரிந்துரை செய்யப்படலாம் எனவும் தெரியவருகிறது.