பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"ஆயுளை அதிகப்படுத்தும் பழைய சோறு" பழைய சோறு சாப்பிடுவதால் சளி தொல்லை ஏற்படுகிறதா.!?
கோடைகாலத்தின் அருமருந்து
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து பலரும் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் பலருக்கும் உடலில் நீர் வறட்சி, உடல் அதிக வெப்பம் அடைவது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க பழைய சோறு அருமருந்தாக இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் காலத்தில் காலையில் எழுந்த உடனே பழையசோறு சாப்பிட்டு நீண்ட நாட்கள் வலிமையாகவும், நோய் நொடி இன்றியும் வாழ்ந்து வந்தனர்.
வெளிநாட்டு உணவு
அந்த அளவிற்கு பழைய சோற்றில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பழைய சோறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன், உடலில் இரும்பு சத்தை அதிகப்படுத்தி நோய் பாதிப்புகள் நம் உடலை தாக்காமல் பாதுகாக்கிறது. பல நூற்றாண்டுகளாக பழைய சோற்றை சாப்பிடும் பழக்கம் தென்னிந்திய மக்களுக்கு அதிகமாக இருந்து வருகிறது. தற்போது கூட கிராமத்து மக்களிடையே இந்த பழக்கம் உள்ளது. குறிப்பாக பல வெளிநாட்டு உணவகங்களில் கூட பழைய சோற்றை காலை உணவாக தருகின்றனர்.
ஆனால் தற்போதுள்ள நகர்ப்புற மக்களுக்கு இந்த பழைய சோற்றின் அருமை தெரிவதில்லை. மேலும் இதை சாப்பிடுவதால் சளி பிடித்துக் கொள்ளும் என்று பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் இதில் உண்மை இல்லை. பழைய சோற்றில் சிலர் பிரிட்ஜில் வைத்த தயிர், மோர் சேர்த்து சாப்பிடுவதாலேயே சளி தொல்லை உடலில் ஏற்படுகிறது.
பழைய சோற்றில் உள்ள நன்மைகள்
மேலும் குடல் புண், அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் பழைய சோற்றை தினமும் காலையில் சாப்பிட்டு வரலாம். இது செரிமானத்தை சரி செய்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதயத்திற்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகளை சீராக்குகிறது. இதில் பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் பழைய சோறு உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.