#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மக்களே உஷார்! சானிடைசர் தெளித்ததும் தீப்பற்றி எரிந்த பைக்! பதறவைக்கும் வீடியோ!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்த நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பல பகுதிகளில் சில தளர்வுகளும் விதிக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனோ மேலும் பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக பல பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அகமதாபாத்தில் இயங்கி வரும் அரவிந்த் மில்லில், நுழைவுவாயிலில் அனைத்து பணியாளர்களின் பைக்கிலும் சானிடைசர் தெளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சமீபத்தில் பணியாளர் ஒருவரின் பைக்கில் சானிடைசர் தெளிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது எஞ்சின் அதிக அளவு சூட்டில் இருந்த நிலையில், பைக் தீப்பற்றி எரிய தொடங்கியது.
அப்பொழுது அதிர்ஷ்டவசமாக பணியாளர் பைக்கில் இருந்து குதித்து தப்பித்துவிட்டார். பின்னர் அங்கிருந்த காவலாளிகள் பைக்கில் எரிந்த தீயை அணைத்தனர்.இந்த வீடியோ அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்பொழுது எச்சரிக்கை செய்யும் விதமாக வெளியாகி வைரலாகி வருகிறது.