#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாஜக தலைமையில் தணிந்து நின்று ஆட்சியை கைப்பற்றுவோம்; கர்நாடகாவில் அமித்ஷா உறுதி..!
கூட்டணியின்றி தனித்து நின்று பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தேசிய செயலாளர் & மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "பாரதிய ஜனதா தளம் (எஸ்) கட்சியோடு இணைந்து கூட்டணிவைத்து கர்நாடகாவில் போட்டியிடவுள்ளதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்தே போட்டியிடும்.
மாநிலத்தில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை வெற்றியோடு ஆட்சியை அமைப்போம் என்பதை நான் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அதிகாரத்தை பெற்று ஊழல் செய்வதே அவர்களின் பாணி. எங்களை பொறுத்தவரையில் அதிகாரம் மக்களை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.
சமீபகாலங்களில் நடைபெற்று முடிந்த 7 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 5 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி அடைந்துள்ளது. இவற்றில் 6 மாநிலங்களில் காங்கிரஸ் பெரியளவிலான சரிவை சந்தித்து இருக்கிறது" என்று தெரிவித்தார்.