பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாஜக பிரமுகரின் மகள் துப்பாக்கி முனையில் கடத்தல்! மேற்கு வங்கத்தில் பரபரப்பு
மேற்கு வங்கம், பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த பாஜக உள்ளூர் தலைவர் சுப்ரபாத் பத்யபால். இவர் 5 மாதங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவினார். அதற்கு முன்பு 5 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் லப்பூரில் உள்ள அவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்தனர். அப்போது சுப்ரபாத் வீட்டில் இல்லை. அவரது 22 வயது மகளும் அண்ணன் சுஜித் பத்யபால் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
துப்பாக்கிகளுடன் வீட்டிற்குள் புகுந்த அவர்கள் சுஜித்தை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு சுப்ரபாத்தின் மகளை மட்டும் வெளியில் நிறுத்தி வைத்திருந்த காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அவர்கள் சந்தேகத்திற்குறிய ஒரு நபரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அரசியல் காரணங்களுக்காக நடைபெறவில்லை என்றும் கடத்தப்பட்ட பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.