#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிகாலையில் பா.ஜ.க-வினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! கொரோனா பாதித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. மரணம்.!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மருத்துவ ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்கள் என பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி, கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 59. ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஸ்வரிக்குக் கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
BJP leader and MLA from Rajasthan's Rajsamand, Kiran Maheshwari passes away at Medanta Hospital in Haryana's Gurugram. She had tested positive for #COVID19 and was undergoing treatment at the hospital.
— ANI (@ANI) November 30, 2020
(Pic courtesy: Kiran Maheshwari's Twitter) pic.twitter.com/o8cNb8lyTS
இதையடுத்து, எம்.எல்.ஏ கிரண் மகேஸ்வரி டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று(நவ.30) காலை காலமானார். கொரோனா தொற்றால் மரணம் அடைந்த கிரணுக்கு சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர.