#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலர் தினத்தன்று நடந்த அதிசய திருமணம்! அதற்கும் ஒரு துணிச்சல் வேணும்ல
நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவாக காதலர்கள் ஒன்றாக வெளியில் செல்வதும், பரிசுகளை பகிர்ந்துகொள்வதும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதுமாக தான் காதலர் தினத்தை கொண்டாடுவர்.
ஆனால் மத்திய பிரதேசத்தில் ஜுனைத் கான் என்ற இளைஞர் தான் காதலித்த திருநங்கையை திருமணம் செய்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். .ஜுனைத் கானின் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் தன் காலலை இழக்கவில்லை.
15 நாட்களுக்கு முன்பு தான் ஜுனைத் கான், ஜெயா சிங் பர்மர் என்ற திருநங்கையிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அப்போதே இருவரும் காதலர் தினத்தன்று திருமணம் செய்துகொள்வதை தீர்மானித்துள்ளனர். இதற்கு ஜுனைத்தின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று ஜெயாவின் உறவினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இவர்கள் விரைவில் முஸ்லீம் முறைப்படி நிக்காஹ் செய்யவும் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து ஜுனைத் கூறியதாவது, "நான் ஜெயாவை மிக அதிகமாக நேசிக்கிறேன். என் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற வேண்டும் என ஆசைபட்டேன். ஆனால் முடியவில்லை. நான் ஜெயாவை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வேன்" என கூறியுள்ளார்.
மேலும் ஜெயா, "திருநங்கைகளை ஒருவர் திருமணம் செய்துகொள்வது இந்தியாவில் மிகவும் அரிது. அவரின் பெற்றோர்கள் எதிர்த்த போதும் அவர் என்னை திருமணம் செய்துகொண்டுள்ளார். நிச்சயம் ஒருநாள் அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள். என் மாமனார் மாமியாருக்கு நிச்சயம் நான் பணிவிடை செய்வேன்" என தெரிவித்துள்ளார்.