கனமழையால் இடிந்து விழுந்த புகழ் பெற்ற பாலம்..!!



Bridge broken down in uttarkand

டந்த சில வாரங்களாக வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையான பருவமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி, மணாலி, உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் வெள்ளம் பெருகெடுத்து ஓடுகிறது. வரலாறு காணாத அழிவுகள் ஏற்பட்டு  வருகிறது. 

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோட்வார் என்னும் நகரில் மாலன் என்னும் ஆறு உள்ளது. அந்த ஆற்றின் மேல் பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் கோட்வார் மற்றும் பாபர் பகுதிகள் இடையேயான போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இருவர் பாதிக்கபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.