#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொடூரத்தின் உச்சம்: நகைகளை திருடியதாக கூறி.. 22 வயது இளம் பெண்ணை... உறவினர்களால் கதற கதற அடித்துக் கொலை.!
உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டிலிருந்த நகைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு இளம்பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் 5 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் காணாமல் போனது. இதனை திருடியதாக குற்றம் சாட்டி 22 வயதான சபினா என்ற பெண்ணை அவரது உறவினர்கள் பலமாக தாக்கி உள்ளனர்.
நகைகளை திருடியதாக குற்றத்தை ஏற்குமாறு வற்புறுத்தி அந்த பெண்ணை பிளேடு மற்றும் கட்டைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். அவரது அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வீட்டின் டிவி சத்தத்தையும் அதிகமாக வைத்துள்ளனர். இவர்களது வீட்டிலிருந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து டிவி அதிக சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு புகார் அளித்தனர்.
காவல்துறையினர் வீட்டை வந்து சோதனை செய்தபோது இளம் பெண் உறவினர்களால் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறை பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இந்த கொலையில் தப்பி ஓடிய குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.