#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாலையில் நின்ற ஆம்னி பேருந்தை அசால்ட்டாக இழுத்துச் சென்ற சூறாவளிக் காற்று..! வைரல் வீடியோ
உம்பன் புயல் காரணமாக வீசிய புயல் காற்றில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று காற்றில் இழுத்துச்செல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் இன்று மிக அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 20ம் தேதி வங்கதேசம் மற்றும் மேற்குவங்கம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் 5 மாநிலங்களில் கடும்மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்று சுழல் காற்றில் சிக்கி 100 மீட்டர் தூரம்வரை இழுத்து செல்லப்பட்டுள்ளது. காற்றில் சிக்கிய பேருந்து பின்புறமாக தள்ளப்பட்டு அங்கிருந்த பள்ளத்தில் இறங்கி பின்னர் அருகில் இருந்த மரத்தில் மோதி நிறுத்தப்பட்டது.