சென்னை நகரை திணறவைத்த இந்திய விமானப்படை சாகசம்; திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம்., கொண்டாட்டமும்., அவதியும்.!



Chennai Air Show Peoples Struggle  


92 வது விமானப்படை தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், அக்.06 ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட அளவிலான வான் சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக அண்ணாசதுக்கம், மெரினா கடற்கரை சாலைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படும், வாகனம் மாற்றுப்பாதையில் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இன்று காலை முதலாக மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள், விமானப்படையின் வீரதீர சாகசங்களை நேரில் கண்டு ரசித்தனர். வான் சாகசத்தை நேரில் காண இலட்சக்கணக்கில் மக்கள் சென்றதால் முக்கிய இரயில் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும், பல முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது.  

ஸ்தம்பித்துப்போன வேளச்சேரி

வேளச்சேரி இரயில் நிலையத்தில் குவிந்த மக்கள் வெள்ளத்தால், இரயில் நிலையமே திண்டாடிப்போனது. மேலும், மெரீனாவை நோக்கி செல்லும் இரயில் பெட்டிகளில் ஆபத்தான முறையில் பயணிகளும் தங்களின் பயணத்தை மேற்கொண்டனர். விமான சாகசம் நிறைவு பெற்றதும் மக்கள் வெள்ளம் மீண்டும் சாலைகளில் அலைமோதி காணப்பட்டது. 

இதையும் படிங்க: நெரிசலில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்சில் துடித்த கர்ப்பிணி; ஓடிச்சென்று உதவிய இளைஞர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!

இதனால் பல இடங்களில் ஆம்புலன்சுகள் செல்ல வழி இன்றி திணறிப்போயின. மேலும், காவல்துறையினர் தொடர்ந்து வாகனங்களை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர். நிகழ்ச்சியை நேரில் காண வந்தவர்கள் தண்ணீர் கிடைக்காமல் அல்லாடிப்போயினர். மேலும், வெயிலின் தாக்கத்தால் பலரும் தாகத்தால் தவித்து ஆங்காங்கே அமர்ந்தனர். கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டோர் மயங்கியதாகவும் கூறப்படுகிறது. 

அப்துல்கலாமின் மண்:
உடல் நலக்குறைவை எதிர்கொண்டவர்கள் உடனடியாக அவசர கதிகளில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். உடனடி முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முன்னிலையில் செய்யப்பட்ட வான் சாகச நிகழ்வு, லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வு பலர்க்கும் ஒவ்வொரு அனுபவங்களை தந்துள்ளது எனினும், அப்துல்கலாம் பிறந்த தமிழக மண்ணில், வான் சாகசம் நடப்பது பெருமைக்குரியதாக கவனிக்கப்படுகிறது.

இரயிலுக்குள் நிரம்பிய கூட்டம்:

கூட்டத்தால் நிரம்பி வழிந்த வேளச்சேரி இரயில் நிலையம்:

போக்குவரத்து திட்டமிடலில் அதிகாரிகள் தோற்றதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு:

இதையும் படிங்க: முன்னாள் பெண் போலீசை ஏமாற்றிய இன்ஸ்டா பிரபலம்.. எப்.ஐ.ஆர் போட்டதும் தலைமறைவு.!