#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் 40 ஆண்டுகளுக்கு பின் அசைவ உணவுகள் நோயாளிகளுக்கு விநியோகம்.!
சென்னையில் உள்ள கீழ்பாக்கத்தில், அரசு மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் மனநலத்திற்காக உயரிய சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. கவனிப்பு முறையும் பிரபலமானது ஆகும்.
இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் சாப்பிட தினமும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆசையாக வாங்கி சாப்பிட்ட பீப் பிரியாணியில் கிடந்த பல்லி; குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.!
1980ல் நிறுத்தப்பட்ட அசைவ உணவு
இதனிடையே, கடந்த 1980ம் ஆண்டு வரையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட அசைவ உணவுகளும் வழங்கப்பட்டு வந்தன. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எலும்பு-இறைச்சி வித்தியாசம் தெரியாமல் சாப்பிட்டு, உடல்நலக்கோளாறுகளையும் எதிர்கொண்டனர்.
44 ஆண்டுகள் கடந்து மீண்டும் அசைவம்
இதனால் கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சைவ வகை உணவுகள் மட்டுமே சமைத்து வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், அசைவ வகை உணவுகள் கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர்.
எலும்பு இல்லாத இறைச்சி
இதனையடுத்து, மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரின், 50 பேர் தவிர்த்து 722 பேருக்கு நேற்று அசைவ வகை உணவு சமைத்து வழங்கப்பட்டது. எலும்பு இல்லாத இறைச்சியாக தேர்வு செய்து அசைவ உணவு வழங்கப்பட்டது.
சைவ உணவை மட்டும் கேட்டவர்களுக்கு, தனியாக சைவ உணவு வழங்கப்பட்டது. வாரத்தின் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் உணவுகள் வழங்கப்படும் எனவும் மருத்துவமனை இயக்குனர் மலையப்பன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளி பட்டினிச்சாவு; அமைச்சர் சி.வி கணேசன் நேரில் அஞ்சலி.!