#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: 32 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல, 11 ம் தேதியான நாளை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 31 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் அடித்து நொறுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
31 மாவட்டங்களில் மழை
இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு மாலை 7 மணிவரையில் இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி,
திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை & புறநகர் பகுதிகளில் மழைக்கான அறிவிப்பு; விபரம் இதோ.!