1556 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல்; சென்னையில் பகீர்.!



Chennai Waste Meats Recovered From Train 

வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு மலிவான விலையில், தரமற்ற இறைச்சிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர் குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. 

அடுத்தடுத்து சிக்கும் ஆட்டு இறைச்சிகள்

அவ்வப்போது முறையான ஆவணங்கள் இன்றி தரமற்று கொண்டு வரப்படும் இறைச்சிகளை பறிமுதல் செய்யப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 1700 கிலோ கெட்டுப்போன இறைச்சி, சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 

தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் அதிர்ச்சி

இந்நிலையில், இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில், தரமில்லாத, கெட்டுப்போன ஆட்டு இறைச்சி கொண்டு வரப்பட்டது. இதன்பேரில் நடந்த சோதனையில், 1556 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: ஒரே யூரின் நாத்தம்.. தியேட்டரா இது?.. சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் பெண்கள் ஆவேசம்.!

தரமற்ற ஆட்டு இறைச்சியை கொண்டு வர ஆர்டர் செய்தவர்கள் யார்? எங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆந்திராவில் பெய்த கனமழையால், இரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதனால் இரயில்கள் வர தாமதமாகி, இறைச்சி கெட்டுப்போனதாகவும் கூறப்படுகிறது.

 
 

 

 

இதையும் படிங்க: விஷ்ணு என்ன தப்ப பேசிட்டார்?.. சொற்பொழிவாளரின் பின்தொடர்பாளர் பேட்டி.!