#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோசை, பூரி, பீட்சா உள்ளிட்ட 40 உணவுப் பொருட்களுக்கு தடை.! அமர்நாத் யாத்திரையில் விதிக்கப்பட்ட அதிரடி கட்டுப்பாடுகள்!!
ஒவ்வொரு ஆண்டும் தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப்பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ஜுலை 1 ஆம் தேதி தொடங்கி 62 நாட்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாத்ரீகர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தினமும் காலை மற்றும் மாலை என குறைந்தது 4 முதல் 5 கிமீ வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாத்ரீகர்களுக்கு வழங்க 40 வகையான உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அசைவ உணவுகள்,ஆல்கஹால், புகையிலை, குட்கா, பான் மசாலா, சிகரெட் போன்றவை, பூரி, தோசை, பதுரா, பீட்சா, பர்கர், பரோட்டா, ப்ரைட் ரைஸ், வறுத்த ரொட்டி, பட்டர் பிரெட், க்ரீம் சேர்க்கப்பட்ட உணவுகள், ஊறுகாய், சட்னி, எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள், நூடுல்ஸ், கூல் டிரிங்ஸ், அல்வா, ஜிலேபி, குலாப் ஜாமுன், லட்டு, அதிகமான உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த திண்பண்டங்கள், சிப்ஸ், மிக்சர், பக்கோடா, சமோசா போன்ற துரித உணவுப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தானியங்கள், பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், சாலட், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெல்லம், சாம்பார், இட்லி, உப்புமா, மூலிகை டீ, காபி, தயிர், சர்பத், எலுமிச்சை பானம், உலர் பழங்கள், வெள்ளை ஓட்ஸ், பால் பாயசம், தேன், வேக வைத்த இனிப்பு உணவுகள், இளநீர், அரிசியில் செய்த உணவுப் பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.