#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"கோவையில் சிறையில் என்னை கொல்லப்போறாங்க" - செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் அதிர்ச்சி தகவல்.!
தமிழ்நாட்டில் அரசியல் குறித்த பல்வேறு கருத்துக்களை முன்வைத்து, பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பிரபலமான நபர் சவுக்கு சங்கர் (Savukku Shankar). இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி வந்தார்.
கோவை வரும்போது விபத்து
சமீபத்தில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி மற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டவர் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, கோவைக்கு அவரை அழைத்து வரும் வழியில் விபத்து நடந்து, அவரின் கைகளும் காயமடைந்தன.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் பயணித்த வேன் விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காணொளி வைரல்.!
சித்ரவதை புகார்
தொடர்ந்து காவல் துறையினர் தன்னை சிறையில் வைத்து தாக்குவதாகவும், விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்வதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு கூறி வருகிறது. அவரின் ஆதரவு வழக்கறிஞரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
கோவை சிறையில் கொல்லப்படுவேன் - சவுக்கு
அவதூறாக பேசுதல், கஞ்சா கடத்தல், குண்டர் என அடுத்தடுத்து பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கோவை நீதிமன்றத்தில் காவல் துறையினரால் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர், செய்தியாளர்களை பார்த்து "கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்" என கூறி சென்றார். இதனால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கோவை சிறையில் கொல்ல படுவேன்.... @SavukkuOfficial pic.twitter.com/RHew7sXLUH
— Gowri Sankar D - Say No To Drugs & DMK (@GowriSankarD_) May 13, 2024
இதையும் படிங்க: மதன் ரவிச்சந்திரன் வீடியோ கேசட்டை திருடியதாக சவுக்கு மீடியா காவல் நிலையத்தில் புகார்.!