#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சவுக்கு சங்கர் பயணித்த வேன் விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காணொளி வைரல்.!
தனியார் யூடியூப் சேனல்களில் காரசாரமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்த யூடியூபர் சவுக்கு சங்கர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெண் காவலர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், கோவை சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் சிக்கி மீண்டு வந்த அதிகாரிகள், சவுக்கு சங்கர்:
அதனைத்தொடர்ந்து, கோவைக்கு அழைத்து வரும் வழியில் காவல்துறை வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சவுக்கு சங்கர் மற்றும் காவல்துறை வாகனம் சேதமடைந்த நிலையில், உடனடியாக மாற்று வாகனம் உதவியுடன் கோவை அழைத்து வரப்பட்டார். தற்போது அவர் சிகிச்சைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கரை சிறையில் கொடுமைப்படுத்தி கையை சிறை காவலர்கள் முறித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ள நிலையில், தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து வரும் வழியில் சவுக்கு சங்கருக்கு மரண பயத்தை காண்பிக்க வேண்டும் (1) pic.twitter.com/KboyRDA9P1
— Anbalagan (@anbu) May 6, 2024
விபத்தின் அதிர்ச்சி காட்சிகள் வைரல்:
இந்நிலையில், சவுக்கு சங்கர் பயணித்த காவல்துறை வாகனம், சாலையை கடக்க காத்திருந்த காரின் மீது தறிகெட்டு இயங்கி மோதி விபத்திற்குள்ளான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏற்கனவே சவுக்கு சங்கரை அரசியல்புள்ளிகள் கொலை செய்ய முயற்சித்ததாக கருத்துக்கள் உலா வரும் நிலையில், விபத்து விடியோவும் வெளியாகியுள்ளது.