பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாஜக எம்.பி-க்கு கொரோனா பாதிப்பு உறுதி.! மருத்துவமனையில் அனுமதி.!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மருத்துவ ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்கள் என பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பாட்டுள்ள சன்னி தியோலுக்கு இமாச்சலப் பிரதேசம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
#SunnyDeol has tested positive for #COVID19.
— Siddharth Dholakia (News18 Gujarati) 🇮🇳 (@SidDholakia) December 1, 2020
He is under isolation in Kullu state.@iamsunnydeol pic.twitter.com/zHApXxWx02
தற்போது குலுவில் தங்கி இருக்கும் சன்னி தியோல் இதன் காரணமாக மேலும் சில நாள் தங்கி இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோல் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.