தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் பணம்! மத்திய அரசு அதிரடி!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு 25-ந் தேதி முதல் அமல்படுத்தியதன் காரணமாக சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு ரூ.500 செலுத்தியது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த கொடூர வைரஸை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவ தொடங்கியதால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு 25-ந் தேதி முதல் அமல்படுத்தியது. இதன் காரணமாக சாதாரண கூலி தொழிலாளர்கள் தொடங்கி அனைத்து தொழில் துறையினரும், வியாபாரிகளும், தனியார் துறையினரும் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
கொரோனாவால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 26-ந் தேதி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி உதவி திட்டங்களை அறிவித்தார். இந்தநிலையில் ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள ஏழைப்பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு (ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய) மாதம்தோறும் ரூ.500 சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.