#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
24 மணி நேரத்தில் 10,328 பேருக்கு கொரோனா பாதிப்பு..! ஆந்திராவிலும் ஆட்டிப்படைக்கும் கொரோனா..!
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
குறிப்பாக மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலங்கள் கொரோனாவால் பெரும் இழப்புகளை சந்தித்துவருகிறது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 10,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 72 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,753 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் ஆந்திராவில் 8,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,780 ஆக உயர்ந்துள்ளது.