மனிதர்களையே மிஞ்சி, காகம் செய்த அசத்தல் காரியம்! வியப்பில் மூழ்கிய நெட்டிசன்கள்! வைரலாகும் வீடியோ!



crow-put-waste-bottle-in-dustbin

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனிமைபடுத்தி கொள்ளுதல் மற்றும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் பல காலங்களாக சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என மக்களிடையே அவ்வப்போது விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை சிலர் பின்பற்றினாலும் ஏராளமானோர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தாங்கள் சாப்பிடும் உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை ஆங்காங்கே தூக்கி வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மனிதர்களையும் மிஞ்சி காகம் ஒன்று யாரோ தண்ணீர் அருந்திவிட்டு வீசி சென்ற பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து குப்பை தொட்டிக்குள் போட்டுவிட்டு சென்றுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.