பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பட்டப் பகலில் கொடூரம்.. பெற்ற தாயை அடித்துக் கொன்ற கொடூர மகன்.. தடுக்க வந்த இருவரையும் கொலை செய்த பரபரப்பு சம்பவம்..!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தனாக்கை சேர்ந்தவர் ஜாவித் அஹ்மத். இவர் இன்று காலை ஒரு கட்டையை எடுத்துக் கொண்டு வந்து அவரது தாய் ஹபிஷாவை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஹபிஷா சம்பவ இடத்திலேயே பலியானதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஜாவீத் தனது தாயை கட்டையால் அடிப்பதை பார்த்த சாலையில் சென்ற குலாம்நபி, முகமது அமீன் ஆகியோர் ஜாவீத்தை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களையும் ஜாவீத் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜாவீத்தை கைது செய்து அவரது தாயைக் கொன்றதற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.