#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எக்கு தப்பா... 'அந்த இடத்தில்' அழுத்தினா இனி குற்றமில்லை... கர்நாடக உயர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு.!
சமீப காலமாக கர்நாடக உயர்நீதிமன்றம் பல பரபரப்பான மற்றும் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு அந்த நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. அந்தத் தீர்ப்பின்படி சண்டையின்போது ஒருவரது அந்தரங்க உறுப்பை தாக்குவது குற்றமாகாது என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா மற்றும் பரமேஸ்வர அப்பா என்ற இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது. அப்போது பரமேஸ்வரப்பா என்பவர் ஓம்கார அப்பாவின் அந்தரங்க உறுப்பை பிடித்து அழுத்திருக்கிறார். இதில் அவரது விதைப்பை நசுங்கி அதனை அகற்றும் அளவிற்கு பெரும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியான பரமேஸ்வரப்பா என்பவருக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக தற்போது தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம்.
அந்தத் தீர்ப்பின்படி சண்டையின்போது ஒருவர்தான் அந்தரங்க உறுப்பை தாக்குவதோ அல்லது பிடித்து நசுக்குவதோ குற்றம் ஆகாது என பரபரப்பான மற்றும் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.