#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓவராக பேசிய தாயை ஒரே போடாக மகள்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
பெங்களூரில் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரத்தில் மகள் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள காவல் நிலையத்தில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் நீல நிற சூட்கேசுடன் வந்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் போலீசார் என்ன ஏது என்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.
அதன் பின்னர் அந்த இளம் பெண் தனது சூட்கேஸை திறந்து காட்டியுள்ளார். அதில் 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், போலீசாரிடம் தகவல் தெரிவித்த அந்த பெண் பெங்களூருவில் உள்ள பிலேகஹல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும் சூட்கேஸில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தன்னுடைய தாய் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் அதில் தாய் தற்கொலை செய்யப் போவதாக தன்னை மிரட்டி வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியதால் தனது தாய்க்கு நிறைய தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்து சூட்கேசில் அடைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயை கொலை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.