விமான நிலையத்தில் தப்பிச்சென்ற குற்றவாளி: சிஎஸ்ஐஎப் விசாரணை.‌!



Delhi airport crimal escape issue

 

பக்ரைன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பயணி ஒருவர் பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்ற வழக்கில் சிக்கி இருக்கிறார். இதனை அடுத்து அவரை மத்திய தொழிற்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பில் வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில், அவர் தப்பி சென்றதாக தெரியவருகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய தொழிற்படை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது‌. சம்பந்தப்பட்ட நபர் கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியா திரும்பியதும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

அப்போதுதான் அவர் அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.