#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking# டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! தேதியை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர்!
டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் போட்டியிட்ட ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தநிலையில், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டபேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்காரணமாக டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லியில், ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஜனவரி 14-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.