#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுகாதார பணியாளர்களை தாக்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு கைது..!
டெல்லியில் உள்ள தென்கிழக்கு பகுதியில் இருக்கும் ஹாகின் பாக் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆசிப் முகமது கான் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் பணிகளை செய்து வந்த நேரத்தில், அங்கு ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர். இதன்போது, அங்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ஆசிப் முகமது வந்த நிலையில், அவரது போஸ்டரும் அகற்றப்பட்டுள்ளது
இதனைக்கண்டு ஆத்திரமடைந்த ஆசிப் முகமது கான், மாநகராட்சி எஸ்.டி.எம்.சி ஊழியர்களை குச்சியால் தாக்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கண்டன குரல்கள் எழுந்த காரணத்தால், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Delhi Police says it has arrested former MLA Asif Mohammad Khan after a video of him abusing & assaulting on-duty MCD staff in Shaheen Bagh area went viral
— ANI (@ANI) November 27, 2021
Congress ka sher ex MLA Asif Mohammad Khan pic.twitter.com/IzRLvcthOj
— Shalim Khan (@ShalimK09282322) November 26, 2021