இளம் பெண் மீது கொண்ட மோகம்: ரூ. 30 லட்சத்தை இழந்த தனியார் நிறுவன அதிகாரி..!



Desiring to send the teenager for a security job

பெங்களூருவில் செக்யூரிட்டி வேலைக்காக இளம்பெண்ணை அனுப்பி வைப்பதாக ஆசை காட்டி, ஒரு பிரைவேட் கம்பெனி அதிகாரியிடம் ரூ.30 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.

பெங்களூரு கோடிசிக்கனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் 49 வயதான ஒருவர்.அவர் பிரைவேட் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 

அவர் இணையதளத்தில் தனக்கு பாதுகாப்பு அளிக்க தனியார் செக்யூரிட்டி வேலைக்காக ஆட்களை அனுப்பும் கம்பெனிகளை தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது இணையதளத்தில் கிடைத்த ஒரு லிங்கை கிளிக் செய்த போது, ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் செக்யூரிட்டி வேலைக்காக இளம்பெண்ணை அனுப்பி வைப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து, அந்த இளம்பெண்ணை நியமிக்க முடிவு செய்து, அவரும் சம்மதம் தெரிவித்தார். அந்த லிங்கில் அவரது அட்ரஸ்,செல்போன் நம்பர் பேன்ற தகவல்களை பதிவு செய்தார். 

அப்போது அவரை ஒரு பெண் தொடர்பு கொண்டு, இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்த முன்பணம் செலுத்த வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டுள்ளார். மேலும் பல காரணங்களை கூறி அந்த தனியார் நிறுவன அதிகாரியிடம் இருந்து 16 லட்சம் பணத்தை கேட்டுள்ளார். இவரும் பணிக்கு இளம்பெண்ணை அனுப்புவார்கள் என்று நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து உள்ளார். ஆனால் அந்தப் பெண் சொல்லியபடி அந்த அதிகாரியின் பாதுகாப்புக்கு செக்யூரிட்டி வேலைக்கு எந்த இளம் பெண்ணையும் அவர்கள் அனுப்பி வைக்கவில்லை.

இதற்கிடையில், வேறொரு பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பெண்ணும், இளம்பெண்ணை செக்யூரிட்டியாக வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி அந்த அதிகாரியிடம்  பேசி ரூ.14 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.. இதனால் அந்த அதிகாரி ரூ.30 லட்சத்தை  பறி கொடுத்துள்ளார். இது குறித்து தென்கிழக்கு மண்டல காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பெண்களை தேடிவருகிறார்கள்.