#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிரிக்கெட்டில் ஓய்வு..! அடுத்த தேர்தலில் போட்டியிடுவாரா தோனி..? பாஜக மூத்த தலைவர் வேண்டுகோள்.!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நடச்சத்திர வீரருமான தோனி 2024 ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப்பிறகு எந்த ஒரு சர்வதேச தொடரிலும் விளையாடாத தோனி தான் இன்றில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று இரவு அறிவித்தார். மீண்டும் எப்போது தோனியை இந்திய அணியில் பாப்போம் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அது வெறும் கனவாகவே மாறியது.
தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றநிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தோனி 2024 ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "சிறந்த கேப்டனாக தோனி எப்படி இந்திய அணியை வழிநடத்தினாரோ அதேபோல் பொது வாழ்க்கையிலும் அவர் ஈடுபட வேண்டும் எனவும், தோனி கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார். அனைத்திலும் அல்ல. அவரது திறமையால் எத்தகைய நிலையையும் எதிர்த்து போராட முடியும். அவர் 2024 ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்".