இந்த அறிகுறிய அலட்சியம் பண்ணாதீங்க.! இதுவும் கொரோனாவா இருக்கலாம்..! மருத்துவர்கள் கூறும் புது அறிகுறி.!



diarrhea also a corona symptoms

கடுமையான வயிற்றுப்போக்கும் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைஸிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தாங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை செய்துவருகிறது.

இந்நிலையில் மக்கள் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுவருகிறது. அதேநேரம் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ளவேண்டியதும் அவசியம். பொதுவாக சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவை கொரோனாவின் அறிகுறிகளாக கருதப்படுகிறது.

corona

இந்நிலையில் 48 மணி நேரத்துக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தால் அதுவும் கொரோனாவாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வைரஸ் சிலரது உடம்பில் சுவாச பாதைக்கு பதிலாக குடல் மற்றும் வயிற்றுப் பகுதியை முதலில் தாக்குகிறது. எனவே மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் வருவதற்கு முன்பாகவே வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு இருந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.