சுவாசக்குழாயில் வலியால் துடித்த 8 மாத குழந்தை... ஸ்கேன் செய்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!



Doctors removed the hock in 8month baby kerala

கேரள மாநிலம் திருச்சூர் மண்ணுத்தி பகுதியை சேர்ந்தவர் வினோத் - தீபா தம்பதியினர். இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை கடந்த 2 மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது.

அதனையடுத்து குழந்தையின் பெற்றோர் குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. உடனே குழந்தையின் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது குழந்தையின் சுவாசக் குழாயில் ஒரு ஊக்கு சிக்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

KERALA

அதன் பின்னர் மருத்துவர்கள் குழந்தையின் சுவாசக் குழாயில் அறுவை சிகிச்சை செய்து ஊக்கினை அகற்றியுள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் உடல் நிலை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.