வாட்ஸ்அப்பில் பல்கலைக்கழக தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!



Exam in whats app

 ஊரடங்கு உத்தரவு காரணமாக பீகார் மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு நாளை வாட்ஸ்அப் மூலம் தேர்வுகளை நடத்தவிருக்கிறது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால், பல நாடுகள் அச்சத்தில் உள்ளது. கொரோனவால் இந்தியாவில் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதானால் அணைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு பள்ளிகளின் தேர்வுகள் மாற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இருக்கும் மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை வாட்ஸ்அப் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. ஆனால் இது இறுதித் தேர்வு இல்லை,  எனவே பயப்பட தேவையில்லை என பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

exam

இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு  பிடிஎஃப் வகையில் கேள்விகள் அனுப்பப்படும். மாணவர்கள் கேள்விகளுக்கு அதிலேயே பதில்களை எழுதி, மீண்டும் பிடிஎஃப் முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில மாணவர்கள் கூறுகையில், பீகாரில் சில கிராமங்களில் இணையதள வசதி சரியாக கிடைப்பதில்லை எனவே அவர்களால் எப்படி இந்தத் தேர்வை எழுத முடியும் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.