பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
காதலனுடன் திட்டம் தீட்டிய மகள்.! மகளை கொன்று உடலை குப்பைத் தொட்டியில் வீசிய தந்தை.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் காகுன்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி. 12ம் வகுப்பு படித்துள்ள ஷாலினி பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் ஷாலினியின் குடும்பத்துக்கு தெரியவந்து அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இந்நிலையில் காதலனின் பெற்றோர் முறைப்படி வந்து ஷாலினியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளனர்.
ஆனால் ஷாலினியின் பெற்றோர் திருமணம் செய்து தரமுடியாது என தெளிவாகக் கூறியுள்ளனர். இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றுள்ளது. இதையடுத்து ஷாலினிக்கு 18 வயது ஆகாததால் அவரால் திருமணம் செய்துகொள்ள முடியாது என போலிசார் தெரிவித்து இரு குடும்பத்தையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், ஷாலினி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனைத் அறிந்து கொண்ட அவரின் பெற்றோர் கடந்த 6ஆம் தேதி இரவு சாலினியை கடுமையாகத் தாக்கி கொலை செய்ததுடன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். இதனையடுத்து ஷாலினியின் தந்தை நடந்த சம்பவத்தை கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார், பின்னர் போலிசார் சாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஷாலினியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.