"இன்னொரு மகனையும் அற்பணிக்க தயார், ஆனால்.. " தீவிரவாத தாக்குதலில் மகனை இழந்த தந்தை!



Father ready to sacrifice next son to punish pak

புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள முகாமுக்கு வீரர்கள் இந்த வாகனங்களில் சென்றனர்.

மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன. அதில் குண்டு வெடித்த வாகனத்தில் இருந்த ஏராளமான வீரர்கள் சிக்கிக் கொண்டனர். பயங்கர தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

Kashmir attack

பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தையும் இந்தியா பறித்துள்ளது. 

இந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர் பீகார் பாகல்பூரை சேர்ந்த ரத்தன் தாகூர் என்ற ராணுவ வீரர். தன் மகனை இழந்த தாகூரின் தந்தை "தாய் நாட்டிற்காக என் ஒரு மகனை ஏற்கனவே அற்பணித்துவிட்டேன். என் தேசத்திற்காக சண்டையிட என்னுடைய இன்னொரு மகனையும் நான் அனுப்ப தயார். ஆனால் இதற்கு காரணமான பாகிஸ்தான் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.