சீனாவுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட மீன்களில் கொரோனா இருக்கு... சீனா குற்றச்சாட்டு



Fish imported from India has corona says chaina

இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளது. மேலும் பலதரப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மீனில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சீனா கூறியுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் பாசு இன்டர்நேசனல் என்ற நிறுவனம் பதப்படுத்தப்பட்ட மீன்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது.

corona

இந்நிலையியல் குறிப்பிட்ட நிறுவனம் அனுப்பிய மீன்களின் மாதிரிகளை சோதனை செய்தபோது அதில் 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகச் சீனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நிறுவனம் சீனாவில் மீன்களை இறக்குமதி செய்ய ஒருவாரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.