#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாங்க இல்லாம உனக்கு கல்யாணமா?!.. ஆத்திரத்தில் புது மாப்பிள்ளையை வீடு புகுந்து தாக்கிய நண்பர்கள்..!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள கைலாசம் பகுதியை சேர்ந்தவர் அகில் (24). இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இவரது நண்பர்கள் விஷ்ணு (28), முருகேசன் (23). இவர்கள் மூவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில், அகில் தனது திருமணத்திற்கு நண்பர்களான முருகேசன், விஷ்ணு ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக நண்பர்கள் இருவரும் அகில் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில், அகில் வீட்டுக்கு வந்த முருகேசன் மற்றும் விஷ்ணு தங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாற ஆத்திரமடைந்த அவர்கள் அகிலை தாக்கியுள்ளனர்.
இதனை தடுக்க வந்த அகிலின் தாய், தந்தையையும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது வீட்டில் இருந்த பல்வேறு அலங்கார பொருட்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அகில் மற்றும் அவரது தாய், தந்தையை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், இடும்பன்சோலை காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் கனி மற்றும் காவல்துறையினர், முருகேசன், விஷ்ணு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.