பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்த முதல்வரின் சகோதரி; காரணம் என்ன?



geetha metha refused to get badmashri award

இந்தியாவில் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் ஆகிய விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகள் இந்தியாவில் 1954-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி ஏற்படுத்தப்பட்டது.

பத்மஸ்ரீ இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய விருது. கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இதுவரை 2679 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், மேசை பந்து விளையாட்டு வீரர் சரத் கமல், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ஆர்.வி.ரமணி, இசைத்துறையை சேர்ந்த ஆனந்தன் சிவமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி (அறுவை சிகிச்சை) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசா முதல்வரின் சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார். தேர்தல் நேரத்தில் பத்ம விருதுகள் அறிவிப்பு தவறான புரிதலை ஏற்படுத்தும் எனக்கூறி கீதா மேத்தா இந்த விருதினை பெற மறுப்பு தெரிவித்துள்ளார்.