இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் பேய்...? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
மாறிவரும் வாழ்க்கை முறை, கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, சரியான தூக்கமின்மை போன்றவற்றால் பல்வேறு நோய்கள் சிறுவயதில்லையே நம்மை தாக்குகின்றன. குறிப்பாக ஒபிசிட்டி என கூறப்படும் உடல் பருமன் நோய் இன்று நம்மில் பலரை தாக்கிவருகிறது.
உடல் எடையால் சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் சிறுவயதில்லையே தாக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தினமும் அதிகாலையில் தங்கள் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும், உடற் பயிற்சி செய்யவும் அரசு சார்பில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைக்கபட்டுள்ளது.
இந்நிலையில் பூங்கா ஒன்றில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி செய்யும் கருவிகள் இரவு நேரத்தில் தானாக இயங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேய்களும் கூட உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன என இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவிருக்கிறது.
In the age of junk food, the ghost also has to exercise to stay fit 😊😊 pic.twitter.com/M66RMSArG5
— Susanta Nanda IFS (@susantananda3) January 17, 2020