கட்டிலுக்கு அழைத்த நபரின் உறுப்பை கட் செய்து அனுப்பிய பெண்! மும்பையில் பயங்கரம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் அந்தரங்க உறுப்பை கட் செய்துள்ளார் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர். 47 வயதாகும் அந்த பெண்ணிற்கு அவரது பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் தினமும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
முதலில் தனது ஆசையை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார் அந்த வாலிபர். ஆனால் அந்த பெண் அதற்கு மறுத்துள்ளார். இருந்தாலும் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிற்கு தொல்லை கொடுத்துள்ளார் வாலிபர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் கணவரை அணுகி, உங்கள் மனைவியை எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும், அவரை எனக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுள்ளார் அந்த வாலிபர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் கணவர் அந்த வாலிபரை திட்டி அனுப்பியுள்ளார்.
அப்போதும் திருந்தாத அந்த வாலிபர் அந்த பெண்ணிற்கு பாலியல் எண்ணங்களை தூண்டும் விதமாக நடந்துள்ளார். சரி இவன் என்றவது ஒருநாள் திருந்தி விடுவான் என்று நினைத்த அந்த பெண்ணிற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பெண்ணிற்கும், மேலும் இரண்டு ஆண்களுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த பெண்ணின் கணவனிடம் கூறியுள்ளார் அந்த வாலிபர். இதனால் கணவன், மனைவி இடையே சண்டை வந்துள்ளது. இதனால் பொறுமையை இழந்த அந்த பெண் அந்த வாலிபருக்கு தக்க பாடம் புகட்ட நினைத்துள்ளார்.
இதனால் தனது தோழிகளுடன் சேர்ந்து அந்த வாலிபருக்கு வங்கியில் லோன் தருவதாக கூறி மறைவான இடத்திற்கு வரவழைத்துள்ளார். அந்த வாலிபர் அங்கு வந்ததும், மறைந்திருந்த அந்த பெண் கத்தியை எடுத்து அந்த வாலிபரின் அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார். வலியால் அலறிய அந்த வாலிபரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் போலீசார் விசாரித்ததில் அந்த பெண் நாந்தான் செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். தற்போது அந்த வாலிபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.