#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாய் வெடித்து உயிரிழந்த பெண்.! மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்!!
உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஷீலா தேவி.அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தநிலையில் மயங்கி கிடந்துள்ளார். இந்நிலையில் உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர்கள் காப்பாற்றி அப்பகுதியில் உள்ள ஜேஎன் என்ற மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர்.
விஷம் குடித்துவிட்டதாக கூறிய நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பொழுது வயிற்றில் இருந்த விஷத்தை எடுப்பதற்காக அவரது வாயில் மருத்துவர்கள் பைப் ஒன்றை விட்டுள்ளனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணின் வாயில் வைக்கப்பட்ட பைப் வெடித்து தீமண்டலமானது. இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இது குறித்து கூறுகையில், விஷம் குடித்துவிட்டதாக அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சல்பியூரிக் அமிலத்தை குடித்திருக்கலாம். அதனாலே விஷத்தை வெளியே எடுக்க அவரது வாயில் பைப் விட்டதும் அதன் வழியாக ஆக்சிஜன் கலந்து பைப் வெடித்து இருக்கலாம் என கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது